காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு பேரிடர் மீட்புக் குழு மற்றும் மீட்பு உபகரணங்களின் நிலையை நேரில் ஆய்வு செய்தார்.
Foldable Stretcher எனப்படும் மடிப்பு ஸ்டெச்சர்கள் 2, நீண்ட மண்வெட்டிகள் 10 , உயிர் காக்கும் வளையங்கள் 25, LIFE JACKET 20, மழை கோட்டுகள் 10, மீட்பு படகுகள் 2 இவைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது.


பாதுகாப்பு ஹெல்மெட்டுகள் 35 உள்ளது . அவை அனைத்தும் சேதமடைந்துள்ளது. 4 தேடுதல் விளக்குகள் இருந்தும் அவைகள் அனைத்தும் வேலை செய்யவில்லை. மரங்கள் அறுக்கும் இயந்திரங்கள் 7 ல் 5 வேலை செய்யவில்லை. 6 ASKA விளக்குகளில் 4 வேலை செய்யாவில்லை. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களை உடனடியாக தயார் நிலையில் வைக்குமாறு எஸ் பி அறிவுறுத்தினார்.


மேலும், மழைக்காலத்தில் அவசர அழைப்பு வந்தவுடன் உடனடியாகச் செயல்படும் வகையில் மீட்புக் குழுவினர் எப்போதும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும், பொதுமக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாப்பதோடு, காவலர்களும் தங்களது பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இயற்கை சீற்றங்களின் போது தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்கவும், மழைக்கால அவசர உதவி மற்றும் தகவல்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் எஸ்பி அரவிந்த் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது, சைபர் கிரைம் ஆய்வாளர் பிரபாகர், எஸ் பி அலுவலக ஆய்வாளர் சுந்தர்ராஜ், விஷ்ணு காஞ்சி ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல் துறையினர் இருந்தனர்.
