ஸ்ரீவில்லிபுத்தூர் : அக் 26
மக்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வை வளர்ப்பதற்காக நகைச்சுவை மன்றம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கப்பட்டது.
புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில், மதுரை வேலம்மாள் மருத்துவமனை உள்ளரங்கில் மாதந்தோறும் நகைச்சுவை மன்றத்தின் கூட்டம் நடந்து வருகிறது. இந்த நகைச்சுவை மன்றத்துக்கு தமிழ் நாடெங்கும் 22 மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. இதே நகைச்சுவை மன்றத்தின் கிளை ஒன்றை விருதுநகர் மாவட்டத்தில் துவக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மூத்த தமிழறிஞர் “தேர்” பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின்படி, உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக “தேர்ப்புகழ்” செ. பாலகிருஷ்ணன், பி. கே. பெரிய மகாலிங்கம், கோவிந்தன், காளியப்பன் ஆகியோரும் நிர்வாகக் குழு தலைவராக எழுத்தாளர் வை. வேல்ராஜ் செயலாளராக எழுத்தாளரும் வழக்கறிஞருமான எஸ். ரமேஷ், பொருளாளராக பட்டிமன்றப் பேச்சாளர் எத்திராஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக குரு கார்த்திக், செயற்குழு உறுப்பினர்களாக கவிஞர் பொன். சுப்புராஜ் மாரியப்பன், பேராசிரியர் சிவநேசன், தலைமை ஆசிரியர் ராஜசேகர் பட்டிமன்றப் பேச்சாளர்கள் சிவகுமார், மகேஸ்வரி, சங்கர் மற்றும் பத்மா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மாதந்தோறும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவதென்றும், மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed