மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது போடிநாயக்கன்பட்டி கிராமம்
இக்கிராம மந்தை அருகே தனியார் ஒருவர் மீட்டிங் கால் கட்டி வருகிறார், இந்நிலையில், இந்த மீட்டிங் ஹால் கிராம நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலரை கண்டித்தும்,
அனுமதி மீறி மீட்டிங் ஹால் கட்டும் பணியை நிறுத்த கோரியும் போடிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் மந்தையில் அமைந்துள்ள சுமார் 45அடி உயரமுள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்காத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்து பல நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீட்டிங்கால் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பொது இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறிய குடிநீர் தொட்டியையும் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேசிய வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தர வடிவில் ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் மீது உரிய விசாரணை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், போராட்டம் நடத்தியவர்கள் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலிருந்து கீழே இறங்கி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொது இடத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாக கூறி பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed