ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து பணிமனைக்கு கூடுதலாக பேருந்துகள் தேவை என சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஏழு புதிய பேருந்துகளை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெற்றி பயணத்தில் புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர், புதிய பேருந்தை சிறிது தூரம் தானே ஓட்டிச் சென்று தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் ஒட்டியதை கண்ட மாணவ மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். பின்னர் பேருந்தில் பயணித்த மாணவ மாணவிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார். இதில் ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
