ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  " உங்களைத் தேடி உங்கள் ஊரில் "  என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
  
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 03 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாகளும், 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும் , 03 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்களும் என 16 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி, பயிற்சி துணை ஆட்சியர் சினேகா, முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத் , முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தவள்ளி , செய்தி- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed