விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவர் குடும்பத்தினருக்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி முன்னிலையில் ரூ.4 லட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை வழங்கினார்.

சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் அவர், அவரது மனைவி சோலையம்மாள், மகன் ஆதிராஜ், செல்வி முத்துசெல்வி என மொத்தம் 4 நபர்கள் வசித்து வந்தனர். கடந்த 22.10.2026 அன்று சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவரது மகள் முத்துசெல்வி(16) என்பவர் மரணமடைந்தார். அவரது மனைவி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மரணமடைந்த செல்வியின் தாயார் சோலையம்மாள், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், அவர்களது குடும்பத்திற்கு பேரிடர் நிவாரணத்தொகை ரூ.4 லட்சத்திற்கான ஆணையினையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி முன்னிலையில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்திகள் : ராமகிருஷ்ணன் எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed