காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது…

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார் அவர்களின் தலைமையில், காந்தி ஜெயந்தியான நேற்று 2 அக்டோபர் 2026 காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்றது.

சண்முகா மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு டிரஸ்டின் தலைமை சட்ட ஆலோசகர் T. வைரவநாதன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்கள், மருத்துவர்கள், வணிகர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காரைக்கால் ஐயங்கார்ஸ் புட்ஸ் லிமிடெட் செயல் இயக்குனர் திருமதி காயத்ரி ராகேஷ், பொது மேலாளர் திருமதி.பிரதீபா, மற்றும் தன்வந்திரி பல் மருத்துவமனை திருமதி. ஜனோபா மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜோதிலதா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, விழாவினை தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா கமிட்டியின் தலைவர் வி. பால சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து, இருதய மற்றும் பொதுநல மருத்துவ முகாமை சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட முபா டைல்ஸ் & சானிட்டரிவேர் உரிமையாளர் முபா.முகமது அன்வர் அவர்கள் தொடங்கி வைத்தார். பல் பரிசோதனை முகாமை, குளோபல் எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் அருண் சாமிநாதன், யான் காதி ரவி சங்கர் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் தொடங்கி வைத்தார்கள். அக்குபஞ்சர் மருத்துவ முகாமை அருண் சர்ஜிகல் , சாந்தி ஜுவல்லரி S.ராம் பிரசன்னா, பிள்ளைத் தெருவாசல் M.பழனிவேல் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சியினை, காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் A.M.ரஞ்சித் அவர்கள் தொடங்கி வைத்தார். இரத்த தானம் மற்றும் முழு உடல் தானம் வழங்குவது குறித்து, மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜோதி லதா அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை வழங்கினார்.

மழை மற்றும் குளிர் காலங்கள் வருவதை முன்னிட்டு, தார்பாய்கள் மற்றும் குளிர்கால போர்வைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி இந்த ஆண்டுக்கான துவக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.

🔷மனசாட்சி விருதுகள் -2026

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் திரு. A. V.சுப்ரமணியன் (AVS) அவர்கள்,
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையில் சிறப்பாக செயலாற்றிய தலைமை ஒருங்கிணைப்பாளர் T.வைரவநாதன் MA BL
தலைமை ஒருங்கிணைப்பாளர் P.சாக்ரடீஸ், விவசாய சேவை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் K.V.செல்வராஜ், தனியார் ஆம்புலன்ஸ் சேவை பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்
N.D.R கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச்சேவை பிரிவின் நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.ஹாஜா மைதீன் ஆகியோருக்கு கோப்பைகள் (சீல்டு) வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர்.

அதேபோல், மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா கமிட்டி தலைவர் V.பாலசுப்பிரமணியன்
காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.தட்சிணாமூர்த்தி காரைக்கால் நகர ஒருங்கிணைப்பாளர் J.விக்னேஷ் ராஜ் மற்றும் காரைக்கால் நிர்வாகி G.செந்தில்குமார் ஆகியோருக்கு விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்கு பாராட்டி நினைவுக் கோப்பைகள் (சீல்டு) வழங்கப்பட்டது.

🔷சிறப்பு பரதநாட்டியம்

பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு, மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினார்கள்.

🔷ID கார்டு

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையில் புதிதாக இணைந்த அங்கத்தினர்களுக்கு அடையாள அட்டைகளை நிறுவன தலைவர் ரா.சம்பத்குமார் அவர்களும், விழா கமிட்டி தலைவர் V.பால சுப்பிரமணியன் அவர்களும் வழங்கினார்கள்.

🔷யோகா நிகழ்ச்சி

இயற்கையும்… யோகாவும் … என்ற தலைப்பில் மாஸ்டர் மாரியப்பன் அவர்கள் யோகா குறித்து பேசினார்.

🔷 நிகழ்ச்சி ஏற்பாடு

மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொருள்வை I.கண்ணுவாப்பா, காரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.தட்சிணாமூர்த்தி காரை நகர ஒருங்கிணைப்பாளர் J.விக்னேஷ் ராஜ், காரை நகர நிர்வாகி G.செந்தில் குமார் ,சிதம்பரம் நிர்வாகி விஜயன் மாநில நிர்வாகி சென்னை D.ஜெய குமார் உள்பட விழா குழு கமிட்டி மற்றும் மேலிட பார்வையாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

🔷 நன்றியுரை

தலைமை ஒருங்கிணைப்பாளர் P.சாக்ரடீஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இதில் காரைக்கால் சுற்று வட்டார பகுதி மக்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் தலைமை, மாநில, மாவட்ட , நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தேசிய கீதம் பாடலுடன் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

செய்திகள் : மணிவண்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed