நாகப்பட்டினம், அக். 8, 2026:
அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (LICAOI) சார்பில், 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு 08.10.2026 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாகப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் (LICAOI) நாகை கிளைத் தலைவர் இரா. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் க. பழனிவேல், கௌரவத் தலைவர் ரெ. குணசேகரன், பொருளாளர் த. கலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எல்.ஐ.சி. முகவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், குறைக்கப்பட்ட முதலாண்டுக் கமிஷனை மீண்டும் வழங்க வேண்டும், முகவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும், முகவர்களுக்கான நலநிதி மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், எல்.ஐ.சி.யின் நேரடிச் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், முகவர்களின் குடும்பக் காப்பீட்டுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும், முகவர்களின் கமிஷன் மீதான ஜி.எஸ்.டி. சுமையை அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட பங்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
எல்.ஐ.சி. முகவர்களின் உரிமைகள், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

“இந்திய நாட்டின் பொருளாதார அச்சாணி எல்.ஐ.சி.தான்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முகவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

செய்திகள் : நா. மணிவண்ணன், எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed