ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் பள்ளி தாளாளர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் கலந்து கொண்டு சாலை விதிகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறையை பற்றியும், விபத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் வண்டி ஓட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும், இருசக்கர வாகனத்தில் சல்பவர்கள் தலைக்கவசம் அணிவது அவசியம் பற்றியும், சீட் பெல்ட் பற்றியும் விரிவாக பேசினார்.


நிகழ்ச்சியில், சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரி போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மாரியப்பன் ராஜபாளையம் வடக்கு சார்பாக ராஜ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு எளிமையாக புரியும் படியாக சாலை விதிகள் மற்றும் போக்சோ பெண்களின் விழிப்புணர்வு, போதை பொருள் பற்றியும் விரிவாக பேசினார்கள். மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பாராட்டு கூறியது.


இறுதியில், மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் நுகர்வோர் அமைப்பின் சார்பாக பொது செயலாளர் துணைத் தலைவர் மாரியப்பன் ராஜபாளையம் தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் மாரியப்பன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 500 மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; ராதாகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
