வேலூர் மாவட்டம், கே .வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ ஆலத்தூர் கிராமத்தில் புதிய வாராந்திர சந்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. கீழ் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற சந்தை தொடக்க நிகழ்ச்சியில், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வியாபாரத்தை தொடங்கி வைத்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் முன்பாக சந்தைக்காக கூடாரம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் வியாபாரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சந்தையில் உள்ளூர் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த பசுமையான காய்கறிகள் மற்றும் பழ வகைகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். மேலும், தரமான தின்பண்டங்கள் மற்றும் வீட்டுக்கு பயன்படக்கூடிய இரும்பு சாமான்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சந்தையில் விற்பனை செய்தனர்.

குறிப்பாக, அதிகாலையில் கோழி மற்றும் ஆடு, இறைச்சிகள் அமோகமாக வியாபாரம் நடைபெற்றது. இதனால், சந்தை தொடங்கிய முதல் நாளிலேயே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சந்தை தொடக்கம் முன்னிட்டு ஊராட்சி மன்ற சார்பில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உபசரித்தார்.

மேலும், கே. வி. குப்பம் ஒன்றியத்தில் நான்காவது வார சந்தை இதுவரை கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் கே. வி .குப்பத்தில் திங்கட்கிழமை வடுவந்தாங்கல், புதன்கிழமை லத்தேரி, ஞாயிற்றுக்கிழமை வாரம் மூன்று இடங்களில் மட்டுமே வார சந்தை நடைபெற்று வந்தனர். தற்போது கீழ ஆலத்தூரில் வார சந்தை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளதால் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 4, இடங்களில் வார சந்தை 4, காக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கீழ் ஆலத்தூர் கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாய பொதுமக்கள் அங்கேயே விலைப் பொருட்கள் இடைத்தரகர்கள் இன்றி வாங்கி கொள்கிறார்கள். கீழ ஆலத்தூர் வார சந்தை தொடக்கத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் முன் நின்று செயல்பட்டதற்கு சுற்று வட்டார ஊர் கிராம மக்களும் பொதுமக்களும் நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *