திருமங்கலத்தில், பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சுமார் 20 அடி தூரம் பேருந்தை தள்ளி நிறுத்தி மாணவர்கள் ஏறுவதற்குள் தானியங். கி கதவை சாத்திய ஓட்டுனர் கண்டுகொள்ளாத நடத்துனர் மாணவிகளின் பாதி கைகள் உள்ளேயும் , பாதி வெளியையும் சிக்கிக்கொண்டதால் பரிதவித்த மாணவிகள்…

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு பேருந்து, TN 58 N 2770 என்ற பேருந்தானது தல்லாகுளம் அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பஸ் பே வில் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார் 20 அடி தூரம் பேருந்தை தள்ளி சாலையில் நிறுத்தி மாணவ – மாணவிகள் ஓடி வரச் செய்து பின்னர் அவர்கள் பேருந்தில் ஏறுவதற்குள் பேருந்தை இயக்க தொடங்கி விட்டார்.

அதற்கு முன்பாகவே தானியங்கி கதவை ஓட்டுநர் மூடவே, மாணவ , மாணவிகளின் பாதி கை உள்ளேயும், பாதி வெளியேயும் இருக்கும் நிலையில் பேருந்தை நகரத்தினார். அதனால் பேருந்துக்காக வெகு நேரம் காத்திருந்த மாணவ – மாணவிகள் பாதிப்பேர் பேருந்தில் ஏற முடியாமல் பரிதவித்தனர். பின்னர் அடுத்த பேருந்துக்காக காத்து நிற்பதற்கு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றனர். இந்த சமயத்தில் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளும் வெளியே இருந்த பொதுமக்களும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துன வரை சரமாரியா வசை பாடினார்.

மாணவர்களின் உயிர் இவர்களுக்கு துச்சமாக தெரிகிறது என பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் ஓட்டுநரை கடிந்து கொண்டனர். போக்குவரத்து நிர்வாகம், மாணவ மாணவிகளின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் ஆவேசமாக கூறினர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed