தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பிலும் 35வது ஆண்டு விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஆகிய ஒன்றியங்களில் 35 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று மீஞ்சூர் ஒன்றியம் ஒன்றியம், பரிக்குப்பட்டு கிராமத்தில், இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


இந்த முகாமில், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை வேந்தர், மருத்துவர்,
கே.நாராயணசாமி அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, பொது மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கண் சிகிச்சைகள், ஆகியவைகளும், உடல் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை உட்பட பலவிதமான பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த முகாமில் 6 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என 25 க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் வந்திருந்து பரிக்குப்பட்டு, உப்பளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கியும், பரிசோதனைகள் செய்தும் மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.


முகாமில், கண் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய பயனாளிகளை மருத்துவ நிர்வாகத்தின் பொறுப்பில், மருத்துவக் குழுவினரே உடன் அழைத்து சென்று, அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், கண் அறுவை சிகிச்சை முடிந்த பின் மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பிலேயே திரும்பவும் கொண்டு வந்து அவர்களுடைய வீட்டில் விட்டு செல்வதாக உறுதியளித்து அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை அளிக்கக்கூடிய நாட்களில் முழுவதும் மருத்துவமனை செலவிலேயே பராமரிக்க ப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவ முகாமை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பிரியா ராஜேஷ் கண்ணா மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா ரஜினி ஆகியோர் துவக்கி வைத்தனர். மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் மில்டன், மாவட்ட செயலாளர் அருள், பொருளாளர் யாகோப், செய்தி தொடர்பாளர் பழவை முத்து, எழில், டேவிட், சுந்தர், குணா உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிறுபுழல்பேட்டை ஊராட்சியில், அடுத்த வாரம் புதன்கிழமை செப்டம்பர் 2 ம் தேதி அடுத்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
