வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் வீடு புகுந்து தந்தை மகனை வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் கிராமத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி(49), அவரது மகன் கவுதம்(21) ஆகிய இருவரையும் பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இது கணேச பாண்டி தரப்பைச் சேர்ந்தவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர்களது உறவினர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டியவர்கள் தரப்பைச் சேர்ந்தவர்களின் தெருக்களில் புகுந்து ஆட்டோ இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

தந்தை மகன் ஆகியோரை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கூமாபட்டி போலீஸார் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த முனியசாமி, பூபதி முனியசாமி, கண்ணபிரான், ராகேஷ், பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சிஉள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
வாகனங்கள் சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக இருதரப்பினர் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் விதத்தில் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் இருதரப்பினரையும் அழைத்து ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed