வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை மில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி மாசுபடா அம்மன் கோயிலில் 6,ம். வெள்ளி ஊஞ்சல் உற்சவம் முன்னிட்டு பக்தர்கள் 1008 பால்குடங்கள் தலையில் சுமந்து ஊர்வலம் நடைபெற்றது குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ தேவி மாசுபடா அம்மன் கோயில் தலைவர் தயாளன், செயலாளர் மாதவன், பொருளாளர் கருணாகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.


அன்று இரவு 8 மணி அளவில் செல்லியம்மன் கோயிலில் இருந்து சக்தி பூ கரகம் அலங்கரிக்கப்பட்டு மேல தாலங்களுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல் 108 வேல் குத்துதல் எலுமிச்சம் பழம் மாலையாக அணிதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினார்கள் குறிப்பாக தீமிதி விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனை மனதார வேண்டி நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள்.

மேலும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தேர் மேல தாளங்களுடன் முக்கிய வழி சாலைகளில் வீதி உலா நடைபெற்றது இவ்விழாவில் கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குடியாத்தம் நகரம் கிராமப் பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்
செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
