கீழக்கரை வட்டம், பனைக்குளம் ஊராட்சியில், நல்லங்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று 69 பயனாளிகளுக்கு ரூ.8.89 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வழங்கினார் .
  
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், பனைக்குளம் ஊராட்சி, நல்லங்குடி கிராமத்தில் வருவாய்த்துறை , பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
  
நிகழ்ச்சியில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது :
     
மக்கள் மாவட்ட நிர்வாகத்தை தேடி வந்த நிலை மாறி மாவட்ட நிர்வாகமே மக்களைத் தேடி முகாமிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசு உத்தரவிட்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கீழக்கரை வட்டம், நல்லங்குடி கிராமத்தை தேர்வு செய்து சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்களிடம் கோரிக்கைகள் பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கிராம மக்கள் கிராமத்தின் முக்கிய கோரிக்கையான மழைக்காலம் வருவதற்கு முன் ஊரணியை தூர்வாருதல், சாலை வசதிகளை சீர்செய்தல் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவார்களை அறிவுறுத்தினார்.


இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கச் செய்வது. அதேபோல் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையச் செய்வது என்பதேயாகும். அந்த வகையில் இம்முகாமில் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்துத்துறை தலைமை அலுவலர்கள் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதுடன்  தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட உத்தரவிட்டுள்ளார்கள். பொதுமக்களாகிய நீங்கள் தங்கள் பகுதியில் முகாம்கள் நடைபெறும் பொழுது தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வருவாய்த்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை, மகளிர் திட்டம், பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆகிய துறைகள் அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டதுடன், இக்கண்காட்சி அரசு அலுவலர்களுக்காக அமைக்கப்பட்டது அல்ல.

பொதுமக்களும் அந்த அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு தேவைகேற்ப திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து , வருவாய் , பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு திருமண உதவித்தொகை ரூ.10,000/- மதிப்பீலும், 07 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் , ஈமக்கிரியை உதவித் தொகை ரூ.1,75,000/- மதிப்பீலும், 01 பயனாளிக்கு விபத்து நிவாரணம் ரூ.1,00,000/- மதிப்பீலும், 05 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா ரூ.50,000/-மதிப்பீட்டிலும், 07 உட்பிரிவு பட்டாகளும், மாவட்ட வழங்கல் , நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும்,

வேளாண்மை , உழவர் நலத்துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு பேட்டரி மூலம் இயக்கப்படும் தெளிப்பான் ரூ.4,150/- மதிப்பீட்டிலும், 01 பயனாளிகளுக்கு உளுந்து விதைகள் ரூ.1,200/- மதிப்பீட்டிலும், 01 பயனாளிகளுக்கு திரவ உயிரி உரம் ரூ.150 மதிப்பீலும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 22 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையும், 01 பயனாளிக்கு திருமண உதவித்தொகை ரூ.20,000/- மதிப்பீலும், 01 பயனாளிக்கு ஓய்வூதியம் ரூ. 14,400/- மதிப்பீலும், 01 பயனாளிக்கு இயற்கை மரண நிவாரணம் ரூ.55,000/- மதிப்பீலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு இணைப்புச் சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் எஸ்கூட்டர் ரூ.1,01,800/- மதிப்பீட்டிலும், 02 பயனாளிக்கு முழங்கை தாங்கி ரூ.6,200/- மதிப்பீட்டிலும், 01 தோள்பட்டை தாங்கி ரூ.1,938/- மதிப்பீட்டிலும், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 05 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக் கடனுதவி ரூ.3,50,000/-மதிப்பீலும் என மொத்தம் 69 பயனாளிகளக்கு ரூ.8,89,838/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த வ.சங்கரநாராயணன் , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , மாவட்ட வழங்கல் அலுவலர் த ரமேஷ் , கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed