கிருஷ்ணகிரி ரெட் கிராஸ் மாவட்ட கிளை அலுவலகத்தில் ஜெனிவா ஒப்பந்த நாளை முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சார்பாக, ஹாம் ரேடியோ மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .தினேஷ் குமார் திறந்து வைத்து கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்பொழுது…. பேரிடர் காலங்களில் உடனடியாக பாதிப்படைவது தொலைத்தொடர்பு துண்டிப்புதான். இதுபோன்ற பேரிடர் காலங்களில் உடனடியாக தகவல் தொடர்பு பெறுவதற்கு ஹாம் ரேடியோ மிக முக்கிய பங்காற்றுகிறது. ஹாம் ரேடியோ பொறுத்துவரை அதற்கு மின்சாரம், நெட்வொர்க் இன்ப்ராஸ்ட்ரெக்சர் தேவையில்லை. ஹாம் ரேடியோ நாம் பேசுவதை ரேடியோ அலையாக மாற்றி, அதை அயனோஸ்பியர் வரைக்கும் அனுப்ப செய்து, மறுபடியும் ஹாம் ரேடியோவில் உள்வாங்கி நமக்கு எளிதில் புரியும் படியாக துள்ளிமாக தகவல் தெரிவிக்கும்.
மேலும், அனைவராலும் ஹாம் ரேடியோ இயக்க முடியாது. ஏன் என்றால் ஹாம் ரேடியோ இயக்குவதற்கு லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும், ஹாம் ரேடியோவிற்கு என்று ஒரு கால் சைன் இருக்கின்றது.

இதுபோன்ற ஹாம் ரேடியோ கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையை கருத்தில் கொண்டு இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வட்ட அளவில் இம்மையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ரெட் கிராஸ் அலுவலகத்தில் அமெச்சூர் ரேடியோ, அவசர கால தகவல் தொடர்பு அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் இன்று துவக்கப்பட்டுள்ளது.
பேரிடர்கள் மற்றும் பிற அவசர கால சூழ்நிலைகளில் தகவல் தொடர்பை வலுப்படுத்தவும் திறம்பட தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் உடனடியாக தகவல் தொடர்பு ஏற்படுத்தி மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியும். நமது மாவட்டத்தில் ரெட் கிராஸ் மூலம் பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மையம் அமைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.1000 நன்கொடை செலுத்தி ரெட் இந்தியன் கிராஸ் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சாய்சைதன்யா ஜாதவ், ரெட் கிராஸ் ஹாம் ரேடியோ க்ளப் இயக்குநர் பொறியாளர் மனோகரன், கப்பல் பொறியாளர் நீலகண்டன், வட்டாட்சியர் ராஜலட்சுமி, தீயணைப்பு அலுவலர் அந்தோணி சாமி, இந்தியன் ரெட் கிராஸ் நிர்வாகிகள் செந்தில் குமார், மோகன், மனோரா ரெட் கிராஸ் ஹாம் ரேடியோ க்ளப் தலைவர் செல்வம், துணை தலைவர் கண்ணன் மற்றும் பிஎஸ்வி தொழில்நுட்ப கல்லூரி, பொருமாள் மணிமேகலை தொழில்நுட்ப கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
