மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரபல தொழிலதிபரும் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் அரிமா சங்க தலைவரு மான மருதுபாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது வாடிப்பட்டியில் உள்ள அன்பே கடவுள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னதானத்திற்கான நன்கொடை வழங்கப்பட்டது.

முன்னதாக, சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாளர்கள் மாணவ மாணவிகள் தாளாளர் மருது பாண்டியன் அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மற்றும் தலைமை ஆசிரியை தீபா ராகினி ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் செயலாளர் ராசி ஸ்டுடியோ கண்ணன் பொருளாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வாடிப்பட்டி தாலுகா தங்க நகை அடகு கடை உரிமையாளர் சங்கம் சார்பில் செயலாளர் காளீஸ்வரன் பொருளாளர் இருளப்பன் என்ற ராஜா நிர்வாகிகள் மீசை கோபால் முத்துராமன் மீனு ஆனந்த் முருகேசன் மும்பை கண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் சந்தோஷ் வழக்கறிஞர் அபிராமி ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து சோழவந்தானின் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சமுதாய அமைப்புகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய நிர்வாகி வழக்கறிஞர் தியாகராஜன் தலைமையில் கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் பேரூராட்சி சார்பில் அதன் பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக சார்பில் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் சங்கங்கோட்டை பகுதியை சேர்ந்த வார்டு செயலாளர் ரவி சந்திரன் கண்ணதாசன் வணங்காமுடி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் சங்கங்கோட்டை கிராமத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து விக்கிரமங்கலம் கல்புலிச்சான்பட்டி குருவித்துறை மன்னாடிமங்கலம் முள்ளிபள்ளம் தென்கரை ஊத்துக்குளி கச்சிராயிருப்பு சோழவந்தானின் பல்வேறு பகுதிகள் வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து நண்பர்கள் வருகை தந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களும் மருது பாண்டியனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மருது திரையரங்கம், மருது ட்ரான்ஸ்போர்ட், மருது மஹால், மருது பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் பணியாளர்கள் மருது பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து தென்கரை வைகை பாலம் அருகில் உள்ள எம் வி எம் மருத மஹாலில் அசைவ மற்றும் சைவ உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed