கிருஷ்ணகிரியில் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அலுவலர் கலந்துகொண்டு மத்திய அரசு செயல்படுத்துகின்ற மக்கள் நல திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

மத்திய அரசின் மக்கள் தொடர்பகம் சார்பில் கிருஷ்ணகிரி கட்டிகானபள்ளி ஊராட்சியில் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வட்டார அலுவலர் திருமதி. சரஸ்வதி கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் உரையாற்றிய அவர்., மத்திய அரசு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் நலன், மாணவர்கள் நலன், பெண்கள் நலனுக்கு சிறந்த பல திட்டங்களை வழங்கி வருகிறது.

குறைந்த செலவில் மருந்துகள், காப்பீடு, கல்வி கடன், சத்து மாவு, சத்தான மாத்திரைகள், தடுப்பூசிகள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வழங்கி வருகிறது. இதனை அனைவரும் பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் உரையாற்றிய கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் மக்கள் தொடர்பாக உதவி அலுவலர் தியாகராஜன் மக்கள் தொடர்பகத்தின் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

இதில் 5 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு பெறுவதற்கான அட்டை பதிவு, ஆதார் அட்டை திருத்தம், தொழிலாளர் அடையாள அட்டையுடன் 2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பதிவு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 3 ஆயிரம் ரூபாய் பென்சன் திட்ட பதிவு, வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவைக்கான இணையதள பதிவு போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது. இதனையடுத்து இரண்டு நாள் நடைபெறும் மக்கள் நல திட்டங்களின் விழிப்புணர்வு முகாம் குறித்த பிரசார வாகனத்தை வேலூர் மக்கள் தொடர்பக உதவி அலுவலர் ஜெய கணேஷ் தொடங்கி வைத்தார்.

உடன் அஞ்சல் கோட்ட வளர்ச்சி திட்ட அதிகாரி மணிகண்டன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷிணி, மக்கள் தொடர்பக உதவியாளர் தாமோதரன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed