அதில், இருவரின் நட்பை கொச்சை படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குறியது. ’யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு! முன்னாள் அமைச்சரே!! மாண்பு தவற வேண்டாம்!எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் எனவும்,
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற வாசகங்களோடு மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

திரிஷா நற்பணி மன்றம் தொடங்கியதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் தற்போது ஆர் பி உதயகுமாருக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டன போஸ்டர்களை ஒட்டி வருவது குறிப்பிடத்தக்கது
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
