கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தனிமனித, குடும்ப, சமுதாய பாதிப்புகள் குறித்தும் அதனால் நாட்டில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விளக்கினார். அதனால் போதைப் பொருள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றும் அதற்கான விழிப்புணர்வை நாம் சமுதாயத்தில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், ரா. ஜீவா, ச. மரகதம் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
