கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த காட்டுப்பக்கம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயிலில், ஆடி பரணி, கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
விழாவையொட்டி, மூலவர் முருகனுக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. முருக பக்தர்கள் மாவிளக்கு ஏந்தியும் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும், தங்களது நேர்த்தி கடனை செலுத்தி தரிசனம் செய்தனர். இதில் ஜெகதேவி, வேலம்பட்டி மற்றும் அருகில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 46 அடி உயரமுள்ள காட்டுப்பாக்கம் வால்பாறை முருகன் கோவிலில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் காட்டுப்பக்கம் வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றுச் சென்றனர்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவை சின்னசாமி, MCH டிரான்ஸ்போர்ட் பெரியசாமி, சின்னசாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், A.முருகேசன் ரவிக்குமார், ஊர் கவுண்டர்கள் குரியாட்டுகாரனுர், குப்பன்புரம்,சுப்பிரமணிய புரம், பொங்கனூர், ஊர்கவுண்டர்கள் கோவிந்தசாமி, பெரியசாமி, ஆறுமுகம், பீமன், சரவணன் ஆகியோர் ஆடிக்கிருத்திகை விழா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் 5,000க்கும் மேற்பட்டோருக்கு கொட்டாவூர் முருகன் அன்னதானத்தை ஏற்று அனைவருக்கும் சிறப்புடன் வழங்கினார்.
