திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குற்றவியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள் என பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -4 ல் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமும், 10 மணிக்கு தொடங்கும் நீதிமன்ற பணிகள் இரவு 8 மணி வரை நடைபெறுவதாகவும், இதனால் பெண் வழக்கறிஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், கடும் குற்ற வழக்குகளில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுவதாகவும், வாதாடும் வழக்கறிஞர்களுக்கு சரியான மதிப்பு அளிக்கப்படுவதில்லை.


போன்ற காரணங்களை முன்வைத்து, பொன்னேரியில் உள்ள பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கம், பொன்னேரி அட்வகேட் பார் அசோசியேசன், பொன்னேரி லாயர்ஸ் அசோசியேஷன் ஆகிய சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

