பழுதடைந்த மின்மாற்றியை மாற்றாததால் சோகம். மின்வாரியத்துறை மீது படப்பை பொதுமக்கள் கொந்தளிப்பு…
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் படப்பை ஊராட்சியில், துலக்கத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்று நீண்ட நாட்களாகப் பழுதடைந்து காணப்பட்டு வந்தது. இதனைப் புதியதாக மாற்றாமல், அடிக்கடி அறுந்து விழும் மின்சார வயர்களை மின்துறை ஊழியர்கள் தற்காலிகமாக மட்டுமே இணைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, இதே பகுதியில் மின்சார வயர் அறுந்து விழுந்து பசு மாடு ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடாம்மாள் (66) என்ற பெண்மணி ஒருவர் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சார வயர் அவர் மீது பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்வாரிய துறை அலுவலர்களின் மெத்தன போக்கால் தான் உயிர் பலி ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் கொந்தளிப்படைந்து வேதனையில் உள்ளனர்.

செய்திகள் ; லட்சுமி காந்தன் / எதிரொலி / 8939476777
