ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் புரோகிதர்கள் ஹிந்துக்களுக்கு தங்கள் பிதுர் காரியங்கள் பித்ரு தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நிர்வாகம் ” இந்த பகுதியில் இனிமேல் யாரும் புரோகிதம் செய்யக்கூடாது ” என்று அவர்களை எல்லாம் அகற்றி, அந்த இடத்தை சுற்றிலும் யாரும் நுழைய முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்த முயற்சிகள் நடந்திருக்கிறது.

காலம் காலமாக திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலிமிருந்து திருச்சி அம்மா மண்டப படித்துறையில் வந்து மறைந்து போன தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில், திடீரென்று ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் இதை தடை செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த ப்ரோஹிதர்கள் அம்மாமண்டபம் ரோட்டில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் அமர்ந்தனர்.

இந்த விஷயத்தில் மாண்புமிகு அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா?

செய்திகள் ; பாலாஜி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed