மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம்வி கருப்பையா எம் எல் ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார் குறிப்பாக தென்கரை முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனி மன்னாடிமங்கலம் கண்ணுடையாள் புரம் ஐயப்பன் நாயக்கன்பட்டி குருவித்துறை சித்தாதிபுரம் தாமோதரன் பட்டி காடுபட்டி வடகாடு பட்டி புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாகவும் நேரிலும் கருப்பையா எம்எல்ஏவிடம் கூறினார்கள்.


மன்னாடிமங்கலம் கிராமத்தில் நன்றி தெரிவித்த போது அங்கிருந்த பெண்கள் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்றும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மன்னாடிமங்கலம் வரை வந்து சென்ற பேருந்து தற்போது வரவில்லை என கூறினார்கள். மேலும் கூடுதல் பேருந்துகளை தங்கள் பகுதிக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அங்கிருந்த பெண்கள் மன்னாடிமங்கலத்தில் உள்ள அரசு மதுபான கடையால் தங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூரிய பெண்கள் மதுபானக் கடை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் காலி மது பாட்டில்களை மது பிரியர்கள் போட்டு விட்டு செல்வதாகவும் மேலும் சாலையில் செல்லும்போது மது குடித்துவிட்டு போதையில் தகாத வார்த்தைகளால் பெண்களை சீண்டுவதாகவும் இதன் காரணமாக தங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் விவசாய நிலங்களுக்குள் விவசாய பணிகளை செய்ய முடியாமல் சிரமப்படுவதாகவும் ஆகையால் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, அவர்களிடம் உங்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கழிப்பறை வசதி சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் பெண்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அனைத்து மனுக்களுக்கும் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறிச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஊராட்சி செயலாளர்கள் தென்கரை முனியராஜ் முள்ளிப்பள்ளம் குருவித்துறை சின்ன மாயன் மன்னாடிமங்கலம் திருச்செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்திகள் / காளமேகம் எதிரொலி / 8939476777
