கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் கள்ளச்சாராய தாதா ஸ்ரீதர் தனபாலின் மைத்துனரான பிரபல ரவுடி தணிகா கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து அழைத்து வந்ததால் மிகுந்த பரப்பரப்பு காணப்பட்டது.

ஸ்ரீதர் தனபால் மறைவுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் யார் கெத்து என்பதில் பெரும் மோதல் வெடித்தது. ஒருபுறம் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா தலைமையிலான அணியும் மறுபுறம் ஸ்ரீதரின் முன்னாள் டிரைவர் தினேஷ் தலைமையிலான அணியும்
​என இரு ரவுடி கும்பல்களின் தொடர் மோதல்களாலும், ஆதிக்கப் போட்டியாலும் காஞ்சிபுரம் மாவட்டமே பல ஆண்டுகளாக பெரும் பதற்றத்திலேயே இருந்து வந்தது.

​அவ்வப்போது தணிகா என்ற தணிகைமலையை காவல்துறையினர் கைது செய்வதும் குண்டாஸ்ஸில் இருந்து வெளியே வருவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.

​கைது செய்யப்பட்டுள்ள தணிகா மீது 40-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் கொலை மிரட்டல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

சிவகாஞ்சி காவல் எல்லைக்கு உட்பட்ட குஜராத்தி சத்திரம் பகுதியில் ரவுடி தணிகாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.

வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தது வந்த தனிகாவை தனி படை போலீசார் தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed