விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியம் தடுப்புச் சுவரில் ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்வை(49). இவரது மனைவி வீரலட்சுமி(45). இவர்களுக்கு காவியா(15), தனலட்சுமி(16) ஆகிய மகள்களும் அஸ்வின்(10) மகனும் உள்ளனர். சேர்வை தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம் மருதங்குடியில் உள்ள மருதூர் அய்யனார் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வத்திராயிருப்பு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த பெரியவன் மகன் கார்த்திக்(38), பெரியசாமி மனைவி அங்காளஈஸ்வரி(30), சின்னவன் மகள் லட்சுமி(38) ஆகியோர் சென்றனர். ஜிப்பை வத்திராயிருப்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பூபதி(26) என்பவர் ஓட்டி சென்றார்.

மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சென்டர் மீடியம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் பூபதி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். செல்லும் வழியிலேயே அங்காள ஈஸ்வரி உயிரிழந்தார். படுகாயமடைந்த சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரது மகள்கள் மற்றும் மகன் காவியா, தனலட்சுமி, அஸ்வின் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையிலும், லட்சுமி வத்திராயிருப்பு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்த மேலப்பாளையம் பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகள் ; கண்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed