விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் கிடைக்காமல் வேலையின்றி வருமான மின்றி தவிப்பதாகவும், நெசவாளர்கள் நெய்த சேலைகளை கொள்முதல் செய்யாமல் தமிழக அரசு இருப்பதாகவும் இதனைக் கண்டித்து நெசவாளர்கள் சார்பில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்களுக்கு இலவச வேட்டி சேலைகளுக்கான நூல் வழங்கப்படாததை கண்டித்து தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தெரிவித்து மாயாண்டி பட்டி தெருவில் கஞ்சி தொட்டி திறந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் அவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களிடம் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நெசவாளர்கள் மாயாண்டிபட்டி தெரு சாலையில் வைத்து கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் ; K.தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
