விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் 3000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேஷ்டி சேலைகள் நெசவுக்கு நூல் கொடுத்து இவர்கள் நெசவு செய்து கூட்டுறவு கைத்தறி இயக்குனர் சார்பில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். நெசவு செய்த கைத்தறி ரகங்களுக்கு ஏற்ப கூலி வழங்கி வந்தனர்.

தற்போது கடந்த 45 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு சார்பில் நூல் வழங்குவதை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக ராஜபாளையத்தில் உள்ள 7 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் சேர்ந்த நெசவாளர்கள் வேலை இழந்து மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளிக்கு செலவு உணவு மற்றும் இதர செலவுகளுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

எனவே உடனடியாக தமிழக அரசு நூல் வழங்க கோரி ராஜபாளையத்தில் உள்ள தெற்கு வைத்தியநாதபுரம், துரைச்சாமிபுரம், ஜானகிராமச்சந்திரன், ஆவரம்பட்டி பாக்கியலட்சுமி, உட்பட மலையடிப்பட்டி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களை சேர்ந்த 7 நெசவாளர் சங்கங்கள் முன்பு தமிழக அரசு நூல் வழங்க கோரி நெசவாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.

காவல்துறை மற்றும் வருவாய்த்துறை கைத்தறி நூல் துணை இயக்குனர் உள்பட பலர் இதுகுறித்து நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *