வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் வசித்து வருபவர் ஜெயவேலு குற்ற வழக்கு தொடர்பு துறையில் கண் காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சத்துவாச்சாரி ரங்காபுரம் அருகே மூலக்கொல்லை பகுதியில், புன்செய் சர்வே எண்.601/2 மற்றும் அதை ஒட்டிய இதர நிலங்களை சொந்தமாக விலைக்கு வாங்கியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் விவசாயம் செய்ய திட்டமிட்டு அவரது இடத்தின் முன்பு கேட் அமைத்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்து, “நீங்கள் யார் இங்கு வந்து இடம் வாங்குவதற்கு, இடத்தை உடனடியாக காலி செய்து சென்று விடு ” என மிரட்டி உள்ளனர். இது குறித்து ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் ஜெயவேலு சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் அப்பகுதியை சேர்ந்த, கணேசன், பாஸ்கர், J.C.B. டிரைவர் ஞானவேல் ஆகியோர் நிலத்தின் உரிமையாளர் ஜெயவேலுவை , அவருடைய இடத்திற்கு உள்ளே செல்ல விடாமல் வழிமறித்து அவரை தடுத்து நிறுத்தியது மட்டும் இல்லாமல், அவருடைய நிலத்திற்கு முன்பாக, சுமார் 25 அடி அகலம், 5 அடி நீளம், 3 அடி ஆழத்தில் J.C.B வண்டி வைத்து பள்ளம் எடுத்து அவருடைய சொந்த இடத்திற்கு அவரை செல்ல முடியாதவாறு செய்துள்ளனர்.

மேலும், அவரை சட்ட விரோதமாக தடுத்து நிறுத்தி அசிங்கமான தகாத ஆபாச வார்த்தைகளால் மிரட்டி, “உன்னை இங்கேயே கொன்று, உன் இடத்திலேயே புதைத்தால் தான் எங்கள் அண்ணன் சிவாஜி நிம்மதியாக இருக்க முடியும் ” என்று சொல்லி ஜெயவேலுவையும், அவருடன் இருந்த நண்பராகிய சாரதி என்பரையும் தாக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது இருவரும், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடி தொலைவில் நின்று கொண்டு, காவல் அவசர உதவி என்ணை அழைத்து, சிவாஜி என்பவரின் தூண்டுதலின் பேரில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தன்னை மிரட்டுகிறார்கள் என போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் பிரச்சனை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

என் சொந்த இடத்திற்கு என்னை செல்ல விடாமல் என் இடத்திற்கு முன்பு ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி என்னையும், என் நண்பரையும் ஆபாசமாக மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்த நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்று கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஓய்வு பெற்ற குற்ற வழக்கு தொடர்பு துறை கண் காணிப்பாளருக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் நிலை என்ன ? என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed