மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தனர். வெற்றி பெற்று 40 நாட்களுக்கு மேலான நிலையில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஒரு லட்சம் விவசாய கடன்கள் உள்ள விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மட்டும் தள்ளுபடி செய்வதாகவும், இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் அடுத்தடுத்து விவசாயம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பிச்சை எடுத்தும், திருவோடு ஏந்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பேசிய விவசாயிகள் தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதி படி விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை 60% 70 சதவீதம் என விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதால் மறுபடியும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் அடுத்தடுத்து விவசாயம் செய்வதில் சிரமங்கள் ஏற்படும் ஆகையால் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 100% கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்தடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர் இதில் தென்கரை முள்ளி ப்பள்ளம் ஊத்துக்குளி நாராயணபுரம் மன்னாடிமங்கலம் காடுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *