கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு, புதுமை, ஆராய்ச்சி , தொழில்துறை சார்ந்த கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எம்ஓயு  கையெழுத்திட்டுள்ளது.
    
இந்த ஒப்பந்தத்தை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் , ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் -  நிறுவனர் , டாக்டர் சலூர் ஸ்ரீகாந்த் பட்நாயக் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர். 
    
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாணவர் - மாணவியர்களுக்காக ஐந்து பருவங்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நிறைவில், ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் வழங்கும் ஜென்ரேட்டிவ் ஏஐ சான்றிதழ் மாணவர் - மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

உலகளவில் அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ள ஜென்ரேட்டிவ் ஏஐ, மருத்துவம், நிதி, கல்வி , மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
இதன் மூலம் மாணவர் – மாணவியர்கள் முன்னோடியான செயற்கை நுண்ணறிவு கருவிகள் , பயன்பாடுகளில் தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணத்துவத்தைப் பெறுவார்கள்.

இந்த சான்றிதழுடன் கூடுதலாக, மாணவர் – மாணவியர்களுக்குத் தொழில்துறைக்கு ஏற்ப பொருத்தமான செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள், நேரடி திட்டங்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள், நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் , சர்வதேச அனுபவங்களை பெற முடியும்.
மேலும், கல்வி , தொழில்துறை தேவைகளுக்கிடையேயான இடைவெளியை குறைத்து, மாணவர் – மாணவியர்கள் நடைமுறை அனுபவத்தையும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப திறன்களையும் வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, ஜென்ரேட்டிவ் ஏஐ சான்றிதழும், தொழில்துறை சார்ந்த நேரடி அனுபவங்களும் இணைந்து, மாணவர் – மாணவியர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரித்து, பணிவாய்ப்புத் தேர்வுகளில் அவர்களின் வாய்ப்புகளை வலுப்படுத்தி, வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சூழலில் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்குத் தயார்படுத்தும். புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வின் போது , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் – செயலர் , முனைவர் பி.எல்.சிவக்குமார், ஏஐஜென்திக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான டாக்டர் அர்பித் யாதவ் , செயற்கை நுண்ணறிவு ஆலோசகரான ஊர்வஸ்க் தஸ்தூர், பிசிஏ ஏஐ துறைத்தலைவர் ஜினி ஜேம்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed