வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, ராகுல் காந்தி பிறந்த நள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மாநில தலைவர் பி .ஏ .நவீன் அவர்களின் ஆணைப்படி வேலூர் மத்திய மாவட்ட ஓ.பி.சி. துறை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாநில துணைத்தலைவர் ஜி .ஜலேந்திரன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் ஜி. சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.


குடியாத்தம் நகர தலைவர் டி .லாலா தளபதி, ஓபிசி மாநில துணைச் செயலாளர் எஸ். ஜே. கந்தன் எஸ் சத்யா ஜே. சரஸ்வதி எஸ். மகாராஜன் ஜி. அம்சா, ஏவி. மாசிலாமணி பாரத் நவீன் மாவட்ட துணை தலைவர் விஜய்யேந்திரன் மாவட்டச் செயலாளர் சி. அன்பரசன் மாநில செயல் தலைவர் சுனில், வருங்கால பாரத பிரதமர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை இனிப்புகள் வழங்கி, கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், மாற்று திறனாளி பெண்களுக்கு வீல் சேர் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு சேலை வழங்கினார்கள். இறுதியில், மாசிலாமணி மற்றும் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
வேலூர் செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி / 8939476777
