கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு நுள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், இன்று (19.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து, அதற்கான மருந்துகளை வழங்கிட மாவட்ட சுகாதார அலுவலர், உதவி இயக்குநர் ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று மேல்நிலைத்
தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள், டயர்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகளில் உள்ளிட்டவைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதோடு, வீட்டில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தண்ணீரை மூடி வைக்காமலும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் அலட்சியமாக வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல், உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள் சரிவர பணியை மேற்கொள்ளவில்லை என்றால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், தெரிவித்தார்கள். மாவட்ட
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் .சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

கன்னியாகுமரி செய்தியாளர் ; சுரேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed