தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பின் சார்பில், முப்பெரும் விழா, நட்சத்திரா ஹாலில்
நடைபெற்றது.
இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி, மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில், மாவட்ட தலைவர் M.சுரேஷ், மாவட்ட பொருளாளர் G. புகழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் P. ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் M. ராஜ்குமார் வரவேற்று பேசினார்.


இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து, மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள், மற்றும் 2026 ம் ஆண்டின் உறுப்பினர் அடையாள அட்டைகள், தனியார் பஸ் பாஸ் வழங்கிய, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர் பேசுகையில் ;
தமிழ்நாட்டில், பலவிதமான நல வாரியங்கள் இருந்து வருகின்றன. நலிந்த தொழிலாளர்களின் நன்மைகளுக்காக துவங்கப்பட்ட இந்த நல வாரியங்கள் அந்த துறை சார்ந்த வருவாய்களில் இருந்து ஒரு சிறிது பங்களிப்பை பெற்று, அந்த வாரியத்தில் இருக்க கூடிய நலிந்த தொழிலாளர்களுக்கு நல திட்ட உதவிகளாகவும், மருத்துவ உதவிகளாகவும், கல்வி உதவிகள் மற்றும் ஓய்வு ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பத்திரிகையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நலவாரியத்தின் மூலமாக உண்மையான நலிவடைந்த பத்திரிக்கையாளர்கள் பயனடையவில்லை என்பதுதான் உங்கள் அனைவருடைய குற்றச்சாட்டாக உள்ளது.


மேலும், பத்திரிகையாளர்களாகிய உங்கள் தரப்பில் நல வாரியம் குறித்து பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, இந்த வாரியத்தில் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதில் தொழிற்சங்க சட்ட திட்டத்தின் அடிப்படையில் நியமிக்கவில்லை என்பதும், இந்த வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையில் முறையாக தாலுகா அளவில் பணியாற்றக்கூடிய அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை என்பதும் உங்கள் முக்கிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.


தற்போது பொறுப்பேற்று இருக்கும் புதிய அரசு, பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, பத்திரிகையாளர்களின் நல வாரியத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், ஏற்கனவே பத்திரிகை துறை நழிவடைந்து உள்ளதால், அரசு இந்த நலவாரியத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பேசினார்.


மேலும், இந்நிகழ்ச்சியில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் A. ஸ்ரீனிவாசன், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஜி. காதர் ஷெரீப் மற்றும் பல நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர். இறுதியாக, மாவட்ட துணை செயலாளர் R. அருண்குமார் நன்றியுரை வழங்கினார்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் /எதிரொலி / 8939476777
