மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைகளை கலைய இந்த ஆலோசனைக் கூட்டம் பயனுள்ளதாக அமையுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நோயாளிகள் கருத்து.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மேட்ரன் மற்றும் நர்சிங் சூப்பிரண்டண்ட் தலைமையில் பணியாற்றும் செவிலியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக செவிலியர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு யூனிஃபார்ம்முடன் வார்டுகளுக்கு வர வேண்டும், செவிலியர்களின் வார்டு பணியிட சுழற்சி முறை, மூன்று ஷிப்ட்களுக்கான பணிநேரங்களை முறையாக பின்பற்றுதல், வார்டுகளின் தூய்மையை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் தினசரி படுக்கை விரிப்புகளை மாற்றுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தொற்று தடுப்பு நடைமுறைகள் மற்றும் உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், இரவு மற்றும் இரண்டாம் ஷிப்ட் பணிகளில் தேவையற்ற விடுப்புகள் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மருத்துவமனை சமையலறையில் நோயாளிகளுக்காக வழங்கப்படும் பால் பெறப்பட்டதற்கான புகைப்பட பதிவுகளை மூன்று ஷிப்ட்களிலும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் வீல்சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை பொதுக் கழிவுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் ஏதேனும் அசாதாரண சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மருந்துகளின் இருப்பு மற்றும் காலாவதி தேதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நோயாளிகளிடம் கனிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டு சிறந்த மருத்துவ சேவையை வழங்க அனைத்து செவிலியர்களுக்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைகளை கலைய இந்த ஆலோசனைக் கூட்டம் பயனுள்ளதாக அமையுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நோயாளிகள் கருத்து தெரிவித்தனர்.
செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
