அதில், ஹோட்டல் உரிமையாளர்கள், மீன் வர்த்தக தொழிலாளர்கள், காவல்துறை, உணவுப் பொருள் விநியோகத் துறை, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், போன்ற பல்வேறு துறைகள் கலந்து கொண்டதில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் I.A.S தலைமையில், உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் மருத்துவர்,செந்தில்குமார் M.B.B.S .. (DO) மற்றும் துணை ஆட்சியர் சௌமியா முன்னிலையில், நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தில் மாநில தலைவர் மற்றும் பயிற்சியை இயக்குனர் திரு.ஜாய் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களில் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளையும், நிவாரணங்களையும் கூட்டத்தில் முன்வைத்து பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து குளிர்பதன கிடங்குகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் இதிலுள்ள அனைத்து உணவுப் பொருள்களையும், விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. இவை குளிர் பதன கிடங்கில் இருந்து நேரடியாக குறிப்பிட்ட சந்தைகளுக்கு பெங்களூர், சேலம் போன்ற சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் சரியான அளவிற்கான வரி செலுத்துவதில்லை. எனவே, அதற்கான உணவு பாதுகாப்பு துறை பதிவுச்சான்றோ அல்லது உரிமம் பெறப்படுவதில்லை. அதே போல் இந்த குளிர் பதன கிடங்குகளில் புளி இருப்புகளை வைக்கக்கூடிய மிகப்பெரிய வணிகர்கள் எந்தவித தரச் சான்று பெறுவதில்லை. இது மிகவும் ஒரு மோசடியாகும்.. எனவே, குறிப்பிட்ட
புளிமண்டிகளையும், கிருஷ்ணகிரி மாவட்ட குளிர்பதன நான்கு கிடங்குகளையும், (ஏறக்குறைய – 1000லாரிகளை கொள்ளளவாக), கொண்டிருக்க கூடிய கிடங்குகள் ஆய்வு செய்யவேண்டும். இதில் உணவு பாதுகாப்புத் துறை கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வைக்கப்படுகிறது.

UKL COMRO, UV LIGHT ,R.O SKID ..20 லிட்டர் குடிநீர் கேன்கள் (Packaged Drinking Water) மீது கட்டாயமாக அச்சிடப்பட வேண்டிய விவரங்கள்…
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் BIS (Bureau of Indian Standards) விதிகளின்படி 20 லிட்டர் குடிநீர் கேன்களில் பின்வரும் விவரங்கள் தெளிவாகவும், நிரந்தரமாகவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முழு முகவரி, நிறுவன பெயர், தொழிற்சாலை முகவரி, தொடர்பு எண் / வாடிக்கையாளர் சேவை விவரம் BIS / ISI முத்திரை ISI லோகோBIS உரிம எண் (CM/L Number) தரநிலை எண்..பேக்கேஜ்டு குடிநீருக்கு:
Bureau of Indian Standards தரநிலை IS 14543 நீரின் வகை “Packaged Drinking Water” அல்லது “Natural Mineral Water” (பொருந்தினால்) நிரப்பிய தேதி (Date of Packing) மாதம் / ஆண்டு. 20 லிட்டர் கேன்களில் மேற்கண்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்தால், அது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019, Legal Metrology Rules, FSSAI விதிகள், மற்றும் BIS விதிமுறைகளின் மீறலாக கருதப்படலாம் என சட்டம் சொல்கிறது போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்களின் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் மாவட்ட ஆட்சியருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அளவிலான கலந்தாலோசனை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட துறைக்கு அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு தெரிவித்து கூட்டம் நிறைவுற்றது.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed