வேளாண்மைத்துறை பாடப்பிரிவை படிப்பதற்கு பள்ளி கல்வித்துறையின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா மாணாக்கர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அ.வல்லாளபட்டி பேரூராட்சி அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் வேளாண்மைத்துறை பாடப்பிரிவில் 16 மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் அந்த பாடப்பிரிவை நீக்குவதாகவும், வேறொரு பாடப்பிரிவை எடுத்து படிக்க தலைமையாசிரியர் கூறியுள்ளார்கள்.

இது பற்றி, பெற்றோர் கேசம்பட்டி தேவி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு பேசியபொழுது இந்த ஆண்டோடு வேளாண்மைத்துறை ஆசிரியர் பணி ஒய்வு பெறுவதாகவும்.
அதனால், இந்த பாடப்பிரிவை மதுரை முதன்மை கல்வி அலுவலர் நீக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், மேலூர் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. அவர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்க சொன்னார். அங்கு சரியான பதில் கிடைக்கவில்லை அலட்சியம் செய்யப்பட்டது.

குறைந்தபட்சம் மனு கூட பெற்று கொள்ளவில்லை. ஏற்கனவே மேலூர் பகுதியில் உள்ள கொட்டாம்பட்டி, கோட்டநத்தம்பட்டி பள்ளிகளில் வேளாண்மைத்துறை பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருவாதவூர் பள்ளியில் இப்பாடப்பிரிவு நீக்கும் நிலைமையில் உள்ளது. சேக்கிபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் கடந்தாண்டு கலை பாடப்பிரிவு நீக்கப்பட்டது.

எனவே அ.வல்லாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மைத்துறை பாடப்பிரிவை நீக்கக் கூடாது தொடர வேண்டும்.
அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அவர்கள் மாணாக்கர்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed