தானியங்கி சுத்திகரிப்பு நிரேற்று நிலையம்மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வது வார்டான திருநகர் மகாலட்சுமி நெசவாளர்காலனி பஸ் நிறுத்ததில் மாநகராட்சி நிர்வாகத்தின் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரேற்று நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஒரு லிட்டர் ஒரு ரூபாய், 20 லிட்டர் ரூ 7 என சுத்திகரிப்பு குடிநீரை விநியோகம் செய்தனர்.

இதை நெசவாளர்கள் பயன்படுத்தினர் இந்த நிலையில் சுத்திகரிக்கப்பு இயந்திரத்தை முறையாக பராமரிக்கவில்லை . அதனால் பழுதடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த கூடிய தனியாருக்கு விடப்பட்ட ஒப்பந்த காலம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு – சுகாதாரம்- கேள்விகுறி இதனையொட்டி கடந்த சில வாரங்களாக சுத்திரிக்கப்பு நீரேற்று நிலையம் பழுதடைந்த நிலையில் செயல்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.

இதனால் நெசவாளர்கள் சுத்திகரிப்பு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சுத்திகரிப்பு நீரேற்று நிலையத்தை யொட்டி உள்ள குடிநீர் தொட்டிகளில் சுவரொட்கள் ஓட்டப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தொட்டிகள் ஓட்டி சைக்கிள்கள் நிறுத்த கூடிய ஆக்கிரமிப்புகள் உருவாகும் இடமாகவும், குப்பைகள் சேமிக்கும் இடமாக உருமாறி உள்ளது. மேலும் மழை காலங்களில் மழை தண்ணீர் தேங்கும் இடமாகவும் மாறி உள்ளது. இதனால் சுத்திகரிகப்பு நீரேற்று நிலையமானது சுத்தம், சுகாதாரம் கேள்விகுறியாக இருந்து வருகிறது இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தும் அதை கண்டு கொள்ளப்படாத நிலையாக இருந்து வருகிறது ஆகவே.மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரடியாக சுத்திகரிப்பு நீரேற்ற நிலையத்தை ஆய்வு செய்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சுத்திகரிப்புக்கு நிறுவப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் மின்மோட்டார் அறையை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மேலும் சுத்தம் சுகதாரமாகநீரேற்றும் நிலையத்தை முறையாக பராமரித்துபேணிக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைப்பதை தவிர்த்து மாநகராட்சி ஊராட்சி ஊழியர்கள் மூலமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்எம்.பி.- எம்.எல்.ஏ. நிதியில் போடப்பட்டுதும் செயல்படவில்லைஇதே வார்டில்திருநகர் திருக்குமரன்நகர் 1-வது தெருவில் (ஓனாக்கல்லில்) பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலும் விளாச்சேரிக்கு செல்லக்கூடிய ரோட்டில் சுண்ணாம்பு காளவாசல் – ஜோசப்நகர் செல்லும்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர்மேம்பாட்டு நிதியிலிருந்துமாக போடப்பட்ட சுத்திகரிப்பு நிரேற்றுநிலையமும் செயல்படாத நிலையாக காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதை சம்பத்தப்பட்டஅதிகாரிகள் கண்டும் காணாதாது போல தெரியவில்லை அரசு பணம் வீணாகுவதை தவிர்க்கஉயர் அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed