இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து வருடம் தோறும் பக்ரீத் சிறப்பு தொழுகையை 300அடி திருப்பரங்குன்றம் மலைமேல் இருக்கக்கூடிய ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் எர்ணமலை இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்த தொழுகையில் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இயற்கை வளங்கள் செழித்து பஞ்சங்கள் நம்மை விட்டு அகல வேண்டும் என்று சிறப்பு துவா செய்யப்பட்டது. இறுதியில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து பக்ரீத் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed