திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய பஞ்செட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியின் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பள்ளி அறைக்குள் இருந்த ஸ்மார்ட் டிவி, மின் சாதன பொருட்கள்,கல்வி உபகரணங்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் இருக்கைகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் செலவிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

இது குறித்து கிராம மக்கள் கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி பஞ்செட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டார்.

பின் இதுகுறித்து கிராம மக்களிடமும் பள்ளி பணியாளர்களிடமும் காவல்துறையினிடமும் விசாரணை மேற்கொண்டார்.

பள்ளியின் கட்டமைப்பு குறித்தும் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட பிற வசதிகள் குறித்தும் பொதுமக்கள் அவரிடம் எடுத்துக் கூறினர். விரைவில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.இந்த நிகழ்வில் தவெக சோழவரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் பி.அருண்பாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் மேகாஷ் ,ஒன்றிய பொருளாளர் மணி, பஞ்செட்டி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தனஞ்செழியன் பொறுப்பாளர்,

வழக்கறிஞர் கதிர்வேல், விமல் MTC பிரசாந்த் கிளைச் செயலாளர் ராகுல் இணை செயலாளர் சத்யா துணை கிளை செயலாளர் பரத், மணிகண்டன், சுரேந்திரன்,சதீஷ்,சூர்யா, கெளதம், லோகநாதன்,சரண்ராஜ்,ராம்கி, ஜெகதீஷ்,சரண்குமார்,சேட்டு,பகவதி,டில்லி,மதன்,ஆறுமுகம்,கிஷோர்,சுபாஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed