மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா எம்எல்ஏ சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடத்தில் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு பொட்டல்பட்டி கீழ மட்டையான் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கருப்பையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டிருந்த போது மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள நிலையூர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் மற்றும் பொட்டல்பட்டி கிராமத்தில் குடிநீர் உப்பு கலந்து வருவதால் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர் உடனடியாக வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இதுகுறித்து கலந்து பேசி குடிநீர் வழங்கும் நிர்வாகத்திடமும் மொபைல் போன் மூலம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள நிலையூர் கால்வாயில் தேங்கி கிடைக்கும் குப்பைகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது மேலும் பொட்டல்பட்டி பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

எம் எல் ஏ ஆய்வு மேற்கொண்ட இரண்டு தினங்களில் சம்பந்தப்பட்ட உள்ளூர் தவெக நிர்வாகிகள் மூலம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ள மக்கள் நலம் சார்ந்த பணிகள் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 10 நாட்களுக்குள் செயல்படுத்து வருவதால் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் கூறுகையில் மாதம் ஒருமுறை தங்கள் ஊராட்சிக்கு கருப்பையா எம்எல்ஏ ஆய்வுக்காக வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி. / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed