திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கெனிஷிடோ ரியு கராத்தே டோ இந்தியா மற்றும் சிம்ஹா புரி கெனி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாஸ்டர் அரங்கம் சின்ராசு தலைமையில் கோடைகால சிறப்பு கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது.

பழவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் ஆர்வமாக இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் இறுதி கட்டமாக பழவேற்காடு கடற் பகுதியில் உள்ள தீவுகளுக்கு படகின் மூலம் சென்று படகிலேயே கராத்தே சாகச பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அங்குள்ள தீவுகளில் கராத்தே பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். மாணவர்களின் மன ஒருங்கிணைப்பை சோதிக்கும் வகையிலும் கவனம் சிதறாமல் கராத்தே விளையாட்டை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும் அனுபவரீதியாக உணரும் வண்ணம் மாணவர்களுக்கு படகில் கடல் நீரில் மேல் நின்று பயிற்சி அளிக்கப்பட்டது.

சினிமா படப்பிடிப்பு போல நடந்த இந்த பயிற்சியில் ஆர்வமாக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed