APJ.அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்பில், பசுமை செயற்பாட்டாளர்
அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

மரங்கள் இல்லையெனில் மனிதன் ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் நிலை ஏற்படும் என்பதை ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரி வடிவம் கொண்டு நடித்து காண்பித்தும், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து எடுத்துக்கூறி, தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகளை மறுசுழற்சிக்கு அனுப்பும் முன்பு அதனை கோடை காலங்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் முறையை செயல்முறை வடிவில் காண்பித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.

மேலும், நெகிழிப்பை பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை (மஞ்சப்பை) பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்களோடு கலந்துரையாடி விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சிறப்பாக கலந்துரையாடல் செய்த குழந்தைகளுக்கு விதை உண்டியல் பரிசாக வழங்கி விதை உண்டிகளின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்து வழங்கினார். மேலும் குழந்தைகளின் கரங்களில் துணிப்பை (மஞ்சப்பை) வழங்கி நெகிழி அவர்களுக்கு மாற்றாக அதை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed