மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார வளாகம் மற்றும் கண்ணுடையாள்புரம் அருகே தாமோதரன் பட்டி செல்லும் வழியில் உள்ள கால்வாய் பகுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளிக்கும் இடத்திற்கு செல்ல வேண்டிய பகுதியில் படிக்கட்டுகள் இல்லாத நிலையில் படிக்கட்டுகள் அமைத்து தரவேண்டும் மற்றும் கால்வாய் பகுதிக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மற்றும் பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கருப்பையா எம்எல்ஏ உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து பேசி பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டுவதற்கும் மற்றும் கால்வாயில் படிக்கட்டுகள் மற்றும் பாதை அமைப்பதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் கன்னுடையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த விருகை தருமர் மற்றும் கிராம பொதுமக்கள் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed