மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில் அடிக்கடி மேம்பால பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, சோழவந்தானில் இருந்து பசும்பொன் நகர் ஆலங்கொட்டாரம் ரிஷபம் ராயபுரம் போன்ற சோழவந்தான் நகர் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும் வாடிப்பட்டி நிலக்கோட்டை கொடைரோடு போன்ற வெளியூர்களுக்கும் செல்ல வேண்டிய பொதுமக்கள் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ள நிலையில் கடந்த ஆட்சியாளர்களால் ரயில்வே மேம்பாலத்தை முறையாக திட்டமிடாமல் கட்டப்பட்டதாகவும் இதன் காரணமாக பேருந்துகள் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எதிரே வரும் வாகனங்களை சரியாக கணிக்க முடியாத நிலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பலர் காயம் மட்டும் பலர் உயிரிழந்தம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் நேற்று இரவு ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்ற விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் நேற்று நடைபெற்ற விபத்தில் காயம் பட்டவர்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், இது போன்ற விபத்துகளுக்கு ரயில்வே மேம்பாலம் முறையாக கட்டப்படாததே காரணம் என மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் ஆகையால் புதிய ஆட்சியாளர்கள் சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதி பேருந்து நிலைய பகுதி ரயில்வே மேம்பால படிக்கட்டு பகுதி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து மறு கட்டமைப்பு செய்து பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed