முன்னாள் இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை (மே 21) முன்னிட்டு, கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெங்களூரில் இருந்து துவங்கும் இந்த ஜோதி பயணமானது கேரளா மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தை வந்தடைகிறது. அங்கிருந்து நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்கிறது.

இதன் முன்னதாக ஜோதி யாத்திரை குழுத்தலைவர் துரை வேலு தலைமையில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு வருகை தந்த நமது இந்திய தேசத்தின் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு தின ஜோதி யாத்திரை வருகை தந்தது.

அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மிண்டிகிரி.ரகு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாகத்திரண்டு ராஜீவ் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போச்சம்பள்ளியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் இந்த ஜோதியானது போச்சம்பள்ளியில் இருந்து துவங்கிய இந்த ஜோதி மத்தூர், ஓலைப்பட்டி , சாமல் பட்டி ஊத்தங்கரை வழியாக வருகின்ற 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, இதனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட பொதுசெயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் மடத்தானூர் ஆறுமுகம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்,ல மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோகநாதன், ஆசிரியர் கோகுல், சிவலிங்கம், கணேஷ், குமரி நவாப், சபாபதி, நேரு, மாரியப்பன், அர்சுனன் , உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed