சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ எம்வி கருப்பையா வெற்றி பெற்றவுடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார் அவருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர் பின்னர் கோவிலில் ஜெனகை மாரியம்மன் முன்பு மண்டியிட்டு அமர்ந்து மனம் உருகி வழிபட்டார் நிர்வாகிகள் தாமு வக்கீல் தியாகராஜன் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருப்பையா எம்எல்ஏ சோழவந்தான் தொகுதி வாக்காளர்கள் அளித்த இந்த வெற்றி எனக்கு கிடைத்தது அல்ல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு கிடைத்த வெற்றி நான் வெற்றி பெறவில்லை தலைவர் விஜய் தான் வெற்றி பெற்றுள்ளார்
இந்த வெற்றிக்காக பாடுபட்ட மாவட்டக் கழகச் செயலாளர் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் விஜயின் ஆசியுடன் சோழவந்தான் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் இவ்வாறு கூறினார்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி /. 8939476777
