சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் வி.வளர்மதி - செவிலிய போதகர் நாகேந்திரன் தம்பதியரது செல்வ புதல்வி தனுஸ்ரீ பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் பகுதியில் அமைந்துள்ள கவினா சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர். இவர் தேர்வு முடிவில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், பள்ளி அளவில் முதல் இடமும் (500-க்கு 483 மதிப்பெண்கள்) பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரது குடும்பம் பரமக்குடி நகரசபை பகுதியான காட்டு பரமக்குடியில் வசித்து வருகின்றனர். செவிலிய குடும்பத்தைச் சேர்ந்த சாதனை மாணவி தனுஸ்ரீ பள்ளிக்கும் , குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதால், அவரை பள்ளி நிர்வாகத்தினர், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள்,மருத்துவர் பெருமக்கள் , செவிலிய பெருமக்கள் , கல்வி- சமூக ஆர்வலர்கள்,நகர் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ந்து பாராட்டி வாழ்த்திய வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .
