கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் ஔவை தமிழ் மன்றம் இணைந்து கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் கம்பன் தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

அதில் கிருஷ்ணகிரி கம்பன் கழக பொருளாளர் மு.ஸ்ரீரங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் தலைமை தாங்கினார் மற்றும் சிறப்பு விருந்தினராக தகடூர் தமிழ் கதிர் மற்றும் கவிஞர் கலையா, ஆசிரியர் ஜெயந்தி கலந்துகொண்டு கம்பனை பற்றி கம்பன் கவிநயம் என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள். மற்றும் கம்பன் கழகத் துணைத் தலைவர் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி, நல்லாசிரியர் கி.விஜயக்குமார் கம்பன் கழக மகளிர் அணி செயலாளர் மதிப்புறு முனைவர் கி.சித்ரா ஆகியோர் கம்பராமாயணத்தை பற்றியும் திருக்குறளைப் பற்றியும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

கிருஷ்ணகிரி மகளிர் அணி செயலாளர் டாக்டர் குரு மது மொழி ஆனந்த அவர்கள் மாணவர்களுக்கு தலைமை தாங்கி கம்பராமாயணத்தில் உள்ள பாலகண்டத்தின் பகுதியை பரதநாட்டியம் மூலம் நடத்தி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலை நிகழ்ச்சியில் நடனமாடிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழப்பட்டது.
அங்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.

விழா முடிவில் கிருஷ்ணகிரி கம்பன் கழக செயலாளர் மதிப்புறு முனைவர் மருதம் க.அருள். அவர்கள் நன்றி உரை கூறினார்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed